ETV Bharat / city

மீண்டும் அதிகரிக்கும் கரோனா வைரஸ் பரவல் - சென்னை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

author img

By

Published : Apr 22, 2022, 7:34 AM IST

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமானநிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகளை மாஸ்க் அணிய  ஏா்லைன்ஸ் நிறுவனங்கள் மீண்டும் வலியுறுத்துகின்றன!

சென்னை: கரோனா வைரஸ் தமிழகத்தில் வெகுவாக குறைந்து 30 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தினசரி பாதிப்பு பூஜியம் என்ற நிலை ஏற்பட்டது. பல்வேறு மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் நோயாளிகளே இல்லை. மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழகத்தில் கரோனா வைரஸ் உயிரிழப்புகளே இல்லை. இந்த அளவு கரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டதால், தமிழ்நாடு அரசு கரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகளை வெகுவாக தளர்த்தியுள்ளது.

இரண்டு ஆண்டுகளாக கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்ற உத்தரவு, கடந்த ஒரு மாதமாக தளர்த்தப்பட்டு,மாஸ்க் கட்டாயம் அல்ல, ஆனாலும் அடுத்த ஓரிரு மாதங்களுக்கு மாஸ்க் அணிந்து கொள்வது பாதுகாப்பாக இருக்கும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதிலும் மாஸ்க் அணிபவா்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

இந்த நிலையில் வேகமாக குறைந்து வந்த கரோனா வைரஸ் தொற்று தற்போது பல்வேறு மேலைநாடுகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அ டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தினசரி பாதிப்பு இன்னும் முழுமையாக குறைந்து பூஜியத்திற்கு வரவில்லை. சென்னை, செங்கல்பட்டில் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் பாதிப்பு இருந்து வருகிறது.நீண்ட நாட்களுக்கு பின் நேற்று சென்னை சா்வதேச விமானநிலையத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆக பதிவாகியுள்ளது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தைப்போல் விமான பயணிகள் போர்டிங் பாஸ் வாங்கும் கவுண்டரில் மாஸ்க் அணிந்து இருந்தால் மட்டுமே போர்டிங் பாஸ் கொடுக்கின்றனர். அணியாதவர்களை ஏன் அணிய வில்லை? என்று கேட்டு,மாஸ்க் அணிய கூறுகின்றனா். பயணிகள், பார்வையாளர்கள், விமான நிலைய ஊழியர்கள், பாதுகாவலர்கள் மற்றும் விமான நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுபவா்கள் உட்பட அனைத்து பிரிவினரையும் மாஸ்க் அணியும்படி வலியுறுத்துகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் மாஸ்க் அணிவதை இந்த அளவு கட்டாயப்படுத்துவதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது,அதிகாரிகள் கூறியதாவது; கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரோனா வைரஸ் நோய் தொற்று வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் பரவுவதற்கு முக்கிய காரணங்களாக இருந்தவை விமான நிலையங்கள். அதிலும் சென்னை விமான நிலையத்தில் நோய் தொற்று அதிக அளவில் பரவியது. அதைப் போன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படக் கூடாது என்பதற்காக தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்தந்த ஏா்லைன்ஸ் நிறுவனங்கள் இதைப்போல் பயணிகள் மற்றும் ஊழியர்கள், பாதுகாவலர்கள் அனைவரையும் மாஸ்க் அணியும் படி வற்புறுத்துகின்றனர்.

இப்போது விமான நிலையத்தில் மட்டுமின்றி விமான நிலையத்தை ஒட்டியுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில், அதைப்போல் காா்,டாக்ஸிகளில் விமானநிலையம் வரும் பயணிகள் மாஸ்க் அணிந்து வரும்படி வலியுறுத்த தொடங்கியுள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க:சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.