சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி-யில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அதிகாரிகளின் நிலை குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர்.ஸ்வராஜ் வித்வான் ஆய்வு மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
”ஐஐடியில் எஸ்சி., எஸ்டி., மாணவர்கள் தரக்குறைவாக நடத்தப்படுவதாக புகாரில் கூறியுள்ளனர். ஐஐடியில் சாதி ரீதியிலான துன்புறுத்தல் மாணவர்களுக்கு இழைக்கப்படுகிறது. இது எனக்கு வேதனையை தருகிறது. ஃபாத்திமா தற்கொலை செய்துகொண்ட காரணத்தை, பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை.
ஐஐடியில் இதுவரை 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இது குறித்து நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோருக்கான அமைப்பு செயல்படவும், அங்கீகரிக்கவும் வேண்டும். இங்கு எஸ்.சி., எஸ்.டி., பணியாளர் சங்கம் அங்கீகரிக்கப்படவில்லை. ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறை கடைபிடிக்கவில்லை. அதிலும் தீண்டாமை கொடுமை நடந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் எம்.எஸ்., படிப்பில் 2320 இடங்கள் நிரப்பபட்டுள்ளன. ஆனால், எஸ்.சி., 47, எஸ்.டி., ஆறு பேரும் மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இங்கு நடக்கும் அநீதி தொடர்பாக ஐஐடி இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். மேலும் பிரதமர், மத்திய கல்வி அமைச்சர், குடியரசுத் தலைவர் ஆகியோரிடம் முறையிட உள்ளேன்” என்றார்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை!