சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை செயலகத்தில் சந்தித்தார்.
அப்போது, “தமிழ்நாடு அரசுக்கு 2020-21ஆம் ஆண்டிற்கான பங்கு ஈவுத் தொகையாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் ( டிட்கோ ) சார்பில் 77 கோடியே 93 இலட்சத்து 33 ஆயிரத்து 18 ரூபாய்க்கான காசோலையும், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் ( சிப்காட் ) சார்பில் இடைக்கால ஈவுத் தொகையாக 70 கோடி ரூபாய்க்கான காசோலையும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பில் 7 கோடியே 33 இலட்சத்து 34 ஆயிரத்து 700 ரூபாய்க்கான வங்கி வரைவோலையையும் வழங்கினார்.
இதன் மொத்த மதிப்பு 155 கோடியே 26 இலட்சத்து 67 ஆயிரத்து 718 ஆகும்.
இந்நிகழ்வின்போது , தொழில் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ( பொறுப்பு ) நா . முருகானந்தம் , தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சல், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் த ஆனந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:போதைப் பொருள் வழக்கு: ஆர்யன் கானுக்கு ஜாமீன்