ETV Bharat / city

அரசு மருத்துவமனைகளில் அனுபவம் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்கள் நியமிக்கப்படுவதை உறுதி செய்க - மாநில மனித உரிமைகள் ஆணையம்! - மருத்துவர்கள் அலட்சியமே காரணம் என புகார்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுபவம் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்கள் நியமிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

hrc
hrc
author img

By

Published : Jul 12, 2022, 12:58 PM IST

சென்னை: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த கிரிஜா என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு பிரசவத்திற்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குழந்தை பிரசவிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.

பிறகு அந்த பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக கிரிஜாவின் தாயார் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்த புகாரில், மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே தனது மகள் இறந்ததாகவும், மகள் இறந்த நிலையில் பேரக்குழந்தையை வளர்க்க கஷ்டபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை விசாரித்த ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாயை நான்கு வார காலத்திற்குள் அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுபவம் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்கள் நியமிக்கப்படுவதையும், அவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 400 பேர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.