சென்னை: காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, காஞ்சிபுரம், வேலூர் ஆகியப் பகுதிகளில் இயங்கி வரும் பச்சையப்பாஸ் ஜவுளி நிறுவனம் மற்றும் செங்கல்வராயன் ஜவுளி நிறுவனம், எஸ்கேபி நிதி நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர்களின் வீடுகள் என 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.
இதில் 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். கரோனா காலங்களில் சட்டவிரோதமாக பட்டுச் சேலைகளை விற்பனை செய்து, வரி ஏய்ப்பு செய்ததாக வந்தப் புகாரை அடுத்து, வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பச்சையப்பாஸ் சில்க்ஸ் தொடர்பான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.44 லட்சம் ரொக்கம், 9.5 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 100 கோடி கணக்கில் வராத வருமானமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தனியார் சிட் பண்ட் நிறுவனம் தொடர்பான சோதனையில் 1.35 கோடி ரொக்கமும் 7.5 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டு, 150 கோடி ரூபாய் கணக்கில் வராத வருமானத்தையும் கண்டுபிடித்துள்ளனர்.
சிட் பண்ட் நிறுவனம் குறித்துப் பதிவு செய்யாமல் கடந்த சில வருடங்களில் 400 கோடி ரூபாய் அளவு சம்பாதித்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:அடுத்த 3 மாதங்கள் மிக கவனம் தேவை - எச்சரித்த ராதாகிருஷ்ணன்