சென்னை யானைக்கவுனி என்.எஸ்.சி. போஸ் சாலையில் அமைந்துள்ள டைமன் காம்ப்ளக்ஸின் முதல் தளத்தில் ஸ்ரீ கே.ஜே. ஜுவல்லரி நிறுவனம் இயங்கிவருகிறது. இங்கு வருமானவரித் துறையினர் நேற்று (மார்ச் 25) இரவு 8 மணிமுதல் சோதனை மேற்கொண்டனர்.
தொடர் வரி ஏய்ப்புச் செய்ததாக வந்த புகாரையடுத்து இந்த நிறுவனத்தில் சோதனை நடத்தப்படுவதாக, வருமானவரித் துறை அலுவலர்கள் தரப்பிலிருந்து தெரிவித்துள்ளனர்.
காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் 10 பேர் கொண்ட வருமானவரித் துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கெய்தான் எலக்டிரிக்கல்ஸ் மீது வழக்கு பதிந்த சிபிஐ