இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பச் சலனத்தின் காரணமாக மழை பெய்யக்கூடும் என்றார்.
இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஏழு மணி நேரத்தில், அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ஏழு செ.மீ. மழையும், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி மற்றும் சென்னை மீனம்பாக்கத்தில் தலா நான்கு செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக கூறினார்.
இதையும் படியுங்க: மழைநீரில் மீன்பிடித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நூதனப் போராட்டம்!