ETV Bharat / city

’GCC Vidmed’ செயலி, வாட்ஸ்அப் மூலம் சென்னையில் 2500க்கும் மேற்பட்டோர் ஆலோசனை - சென்னை கரோனா பாதிப்பு நிலவரம்

சென்னை: மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 2,693 நபர்கள் ஜிசிசி விட்மெட் (GCC Vidmed), வாட்ஸ்அப் மூலம் மாநகராட்சி மருத்துவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர்.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி
author img

By

Published : Jun 8, 2021, 9:59 PM IST

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் சாதாரண சிகிச்சைகளுக்காக மருத்துவரையோ (அ) மருத்துவமனைகளுக்கோ செல்வதற்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சியின் சார்பில் ’ஜிசிசி விட்மெட்’ என்ற செயலி உருவாக்கப்பட்டு பொதுமக்களுக்குத் தேவையான சிகிச்சை அதற்குரிய மருத்துவர்களிடம் காணொலி மூலம் 24 மணிநேரமும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

கரோனா தொடர்பான அறிகுறிகள் உள்ள நபர்கள் இச்செயலி மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெறும்பொழுது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகளை மருத்துவர்கள் கேட்டறிந்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

கரோனா தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கும் ஜிசிசி விட்மெட் செயலியின் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்களுக்கு காணொலி வாயிலாக மருத்துவ ஆலோசனைகளை வழங்க கூடுதலாக 94983 46510 / 94983 46511 / 94983 46512 / 94983 46513 / 94983 46514 ஆகிய வாட்ஸ்அப் எண்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் இன்று (ஜூன்.08) வரை ஜிசிசி விட்மெட் செயலியின் மூலம் 1,702 நபர்களும், வாட்ஸ்அப் எண்களின் மூலம் 991 நபர்களும் காணொலிக் காட்சி வாயிலாக மருத்துவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் கரோனா அறிகுறியுடன் இருந்த 105 நபர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.