மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் பெறுவதற்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு தொகைத் திட்ட தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும். இந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் தகுதியான 6,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், அவர்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்கும்.
இதையும் பாருங்கள்: தனியார் கோச்சிங் சென்டரை மிஞ்சும் தன்னம்பிக்கை கோச்சிங்!
மாநில அளவிலான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத் தேர்வு தமிழ்நாட்டில் இன்று 534 மையங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்காக எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 292 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வினை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதினர். இவர்களுக்கு காலை 9.30 மணி முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை படிப்பறிவு தேர்வும் நடத்தப்பட்டது. தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தேர்வு பயம்: நாடகமாடிய ஏழாம் வகுப்பு மாணவன்