1. மாணவ மாணவியர் குறைவாக உள்ள பள்ளி விடுதிகளில் மறுசீரமைத்து தேவைப்படும் இடங்களில் 15 கல்லூரி விடுதிகள் ஒரு கோடியே 48 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் துவங்கப்படும்.
2. பள்ளி மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள 3224 இடங்களில் 41 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் மாணவியரை தங்க அனுமதி அளிக்கப்படும்.
3. சொந்தக் கட்டடம் பழுதடைந்தால் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் இரண்டு விடுதிகளுக்கு 6 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடம் கட்டித் தரப்படும்.
4. மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள மூன்று கள்ளர் மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு கோடியே 17 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் செலவில் உண்டு உறைவிடப் பள்ளிகள் தொடங்கப்படும்.
5. மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள இரண்டு கள்ளர் சீரமைப்பு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக ஒரு கோடியே 34 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் நிலை உயர்த்தப்படும்.
6. சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்கள் 10 பேரை இணைத்து ஒரு குழு என 25 குழுக்களுக்கு 25 நவீன முறை சலவையகங்கள் 75 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தி தரப்படும்.
7. தையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்கள் 10 பேரை அழைத்து ஒரு குழு என 25 குழுக்களுக்கு 25 ஆயத்த ஆடை அழகுகள் 75 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
8. பதினோராம் வகுப்பு பயிலும் கள்ளர் சீரமைப்பு பள்ளி மாணவ மாணவியரை மாநில அளவில் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு 49 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
9. விடுதிகள் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு ஆண்டுதோறும் மூன்று முறை இலவச மருத்துவ பரிசோதனை செய்வதற்கான வழங்கப்பட்டு வரும் இடைநிற்றல் செலவினம் ரூபாய் 1000 லிருந்து ரூபாய் 3000 ஆக உயர்த்தப்படும்.
இதையும் படிங்க:சட்டப்பேரவை நேரலை: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்