முதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கு ஸ்டாலின் ஆஜராவாரா?
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
![NEWS TODAY IMPORTANT TN AND NATIONAL EVENTS TO LOOK FOR TODAY இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11420108_cm.jpg)
தலைமைச் செயலர் ஆலோசனை
![NEWS TODAY IMPORTANT TN AND NATIONAL EVENTS TO LOOK FOR TODAY இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11420108_che.jpg)
தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் கரோனா தொற்று கட்டுப்பாடுகள் குறித்து உயர் அலுவலர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மழை பெய்யும்
![NEWS TODAY IMPORTANT TN AND NATIONAL EVENTS TO LOOK FOR TODAY இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11420108_rain.jpg)
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, திருப்பூர், ஈரோடு ஆகிய எட்டு மாவட்டங்களில் இரண்டு நாள்கள் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் இன்றைய ஆட்டம்
![NEWS TODAY IMPORTANT TN AND NATIONAL EVENTS TO LOOK FOR TODAY இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11420108_ipl.jpg)
ஐபிஎல் தொடரின் எட்டாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.
ராஜஸ்தானில் இன்றுமுதல் இரவு நேர பொதுமுடக்கம்
![NEWS TODAY IMPORTANT TN AND NATIONAL EVENTS TO LOOK FOR TODAY இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11420108_.jpg)
கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவருவதால் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்றுமுதல் ஏப்ரல் 19ஆம் தேதிவரை இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.