ETV Bharat / city

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! - Polytechnic Students

பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியிலும் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி
author img

By

Published : Apr 13, 2022, 1:04 PM IST

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் ஆறாவது நாளான இன்று (ஏப்.13) கால்நடை பராமரிப்புத் துறை, மீன் வளம், மீனவர் நலம் மற்றும் பால்வளத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "பண்ரூட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்கட்டமைப்புகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புதிதாக பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பதற்கு 44.28 கோடி தேவைப்படுகிறது. மேலும் 4.5 ஏக்கர் நிலம் தேவை. ஆகையால் நிதி நிலைமைக்கு ஏற்ப புதிதாக பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழ்நாட்டில் 51 அரசு பாலிடெக்னிக், 34 உதவி பெறும் பாலிடெக்னிக், 40 அரசு பாலிடெக்னிக் இணைப்பு கல்லூரி, 406 சுயநிதி பாலிடெக்னிக் என 509 பாலிடெக்னிக் கல்லூரிகள் இருக்கின்றன.

இனி பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியிலும் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்" என்றார். மதுராந்தகம் சட்டப்பேரவை உறுப்பினர் மரகதம் குமரவேல் பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டண குறைப்பு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் பொன்முடி பதிலளித்தார்.

அப்போது, "அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் கூட மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. இதற்காகவே 5 புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்குவதற்கு 44.28 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. எனவே, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில் கட்டண குறைப்பு தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

இதையும் படிங்க: 'ஒரு மரம் வெட்டப்பட்டால் 10 மரக்கன்றுகள் நடுவோம்' - அமைச்சர் எ.வ.வேலு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.