ETV Bharat / city

அன்னிய மரங்களை அகற்ற போர்க்கால நடவடிக்கை தேவை - சென்னை உயர்நீதிமன்றம்

author img

By

Published : Sep 16, 2022, 10:20 PM IST

தமிழ்நாட்டு வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்ற போர்க்கால அடிப்படையில் தீவிரம் காட்டி நடவடிக்கை எடுக்காவிட்டால் அவை வேகமாக பரவி, தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வனத்தை அழித்து விடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டில் வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது முதுமலை வனப்பகுதியில் அன்னிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்தை நியமிப்பது தொடர்பாக நிதித்துறை பரிசீலனைக்கு அனுப்பபட்டுள்ளதாக கூறி, தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் குறுக்கிட்ட நீதிபதிகள், அன்னிய மரங்களை அகற்ற ஏன் தீவிரம் காட்டவில்லை எனவும், தனியார் நிறுவனங்களின் சமூக பாதுகாப்பு நிதியை ஏன் பயன்படுத்தக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்.

பின்னர் நீதிபதிகள், அன்னிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்தை நியமிப்பது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க அரசுக்கு அக்டோபர் 11ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், அன்னிய மரங்களை அகற்றும் பணிகளை மெதுவாக செயல்படுத்துவதால் எந்த பயனும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், சுற்றுச்சூழலையும், வனத்தையும் பாதுகாக்க அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

அன்னிய மரங்களை அகற்ற போர்க்கால அடிப்படையில் தீவிரம் காட்டாவிட்டால், அவை வேகமாக பரவி தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வனத்தை அழித்து விடும் என்பதால் தனியார் நிறுவனங்களை அடையாளம் கண்டு சமூக பாதுகாப்பு நிதியைப் பெற்று விரைந்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கீழடி அகழாய்வு; முதன்முறையாக முதுமக்கள் தாழியினுள் நெல் கண்டெடுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.