சென்னை: இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக, தென் தமிழகம், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகம், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை (ஏப்ரல் 21) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 22) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 23ஆம் தேதி லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், வட தமிழக உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 24ஆம் தேதி ஓரிரு இடங்களில் மழைப்பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏற்காடு (சேலம்), தாளவாடி (ஈரோடு), டேனிஷ்பேட்டை (சேலம்), சாந்தி விஜயா பள்ளி, மசினகுடி (நீலகிரி) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாள்களுக்கு மழை