ETV Bharat / city

’இல்லம் தேடி கல்வி திட்டம்’ - 568 முனைவர்கள் விண்ணப்பம்! - Education News

முனைவர் பட்டம் பெற்றவர்கள் உள்பட 1,28,161 பேர், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக இணைந்து மாணவர்களுக்கு கற்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இல்லம் தேடி கல்வி திட்டம்
தமிழ்நாட்டு அரசின்
author img

By

Published : Nov 1, 2021, 9:55 AM IST

Updated : Aug 9, 2022, 7:12 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனோ தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இன்று (நவ. 01) முதல் தமிழ்நாட்டில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெறவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ள பெண் தன்னார்வலர்கள்

கரோனோ தொற்றின் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரியாத நாள்களில் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரிசெய்வதற்காக, ’இல்லம் தேடி கல்வி’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கற்பிக்க, பெண் தன்னார்வலர்கள் அதிக அளவில் பதிவு செய்துள்ளனர். இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு தன்னார்வலர்களாக அக்.31ஆம் தேதி மதியம் 12 மணி வரையில் பதிவு செய்தவர்களின் விபரம் பற்றி பள்ளிக்கல்வித்துறை புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்கள் பதிவுச் செய்துள்ளவர்கள் விபரங்கள் பின்வருமாறு:

முனைவர் பட்டம் பெற்றவர்கள் - 568 நபர்கள்

முதுகலை பட்டதாரிகள் - 37,757 நபர்கள்

பட்டதாரிகள் - 58,754 நபர்கள்

பட்டயப்படிப்பு முடித்தவர்கள் - 8,225 நபர்கள்

12ஆம் வகுப்பு முடித்தவர்கள் - 19,032 நபர்கள்

10ஆம் வகுப்பு முடித்தவர்கள் - 2,031 நபர்கள்

திருநங்கைகள் - 47 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 161 நபர்கள் தன்னார்வலர்களாக பதிவு செய்துள்ளனர்.

மதிப்பூதியம் ஆயிரம் ரூபாய்

தன்னார்வலர்களாக பதிவு செய்துள்ளவர்களில், ஒரு லட்சத்து 785 பெண்கள், 27 ஆயிரத்து 329 ஆண்கள், திருநங்கைகள் 47 நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தில், வாரத்தில் ஆறு மணி நேரம் பாடம் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன், மதிப்பூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கான தன்னார்வலர்களின் பதிவு தொடர்ந்து நடைபெற்று வரக் கூடிய நிலையில் தன்னார்வலர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசு கவனம்

இல்லம் தேடி கல்வி திட்டம் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தன்னார்வலர்களைத் தேர்வு செய்வதில் தமிழ்நாடு அரசு மிகுந்த கவனமுடன் செயல்படும் என்று அரசு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் ஆறு மாத காலத்துக்கு சோதனை அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'நகரும் புகைப்படக் கண்காட்சி' : திறந்து வைக்கும் மு.க.ஸ்டாலின்!

Last Updated : Aug 9, 2022, 7:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.