ETV Bharat / city

உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியல்: சென்னை ஐஐடி முதலிடம்

சென்னை: உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

iit-madras
iit-madras
author img

By

Published : Aug 19, 2020, 3:34 AM IST

உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நேற்று (ஆகஸ்ட் 18) வெளியிட்டார். அதில், மத்திய அரசின் நிதி உதவியின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது.

நிதி ஆதரவு, உள்கட்டமைப்பு, விழிப்புணர்வு, ஆலோசனை, கண்டுபிடிப்புகளுக்கான ஆதரவு, தொழில்முனைவோர் மேம்பாடு, கற்றல் முறை, வணிகமயமாக்கல் உள்ளிட்டவைகளை அடிப்படையாக வைத்து மத்திய கல்வி அமைச்சகம், ஏஐசிடிஇ ஆகியவை இணைந்து இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளன.

அதில், மாநில அரசுகளின் பல்கலைக்கழக பட்டியலில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் நான்காவது இடத்தையும், மாநில அரசு கல்லூரிகளின் பட்டியலில் கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

மேலும், தனியார் நிறுவனங்களில் ஒடிஸா மாநிலத்தில் இயங்கி வரும் கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.