கோவிட்-19 சர்வதேச பரவலையும் மீறி மெட்ராஸ் ஐஐடி, நாட்டின் நலனுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இது, அங்கு பயிலும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டுக்கும் பெருமளவில் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மெட்ராஸ் ஐஐடி வரலாற்றில் முதல்முறையாக, ‘மிக்ஷ்டு-ரியாலிட்டி’ என்ற பெயரில் மாநாடு நடத்தியது. இந்த நிறுவனம் உலகின் முதல் பிஎஸ்சி புரோகிராமிங் மற்றும் டேட்டா அறிவியலின் பட்டம் முற்றிலும் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.
இதற்கு முன், கரோனா தொற்று போல் ஒரு சர்வதேச பரவலை உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள நிலையில், மெட்ராஸ் ஐஐடி நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ‘மிக்ஷ்டு-ரியாலிட்டி’ மூலம் உள்கட்டமைப்பு, நோயறிதல் ஆகியவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இது குறித்து மெட்ராஸ் ஐஐடியின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறுகையில், "கோவிட்-19 தொற்றுக்கு மத்தியில் மெட்ராஸ் ஐஐடியில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் தங்களது பின்னடைவை கண்டறிந்தனர். கற்பித்தல், ஆராய்ச்சி, தொழில் ஈடுபாடு உள்ளிட்ட அனைத்திலும் சிறந்து விளங்குகின்றனர். பிஎஸ்சி புரோகிராமிங் மற்றும் டேட்டா அறிவியலில் பட்டம் பெற்ற மாணவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் தரவரிசைபடி, இந்த ஆண்டு கல்வியில் மெட்ராஸ் ஐஐடி சிறந்து விளங்குகிறது" என்றார்.
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சில மணிநேரங்களுக்குள் நாட்டில் எங்கும் நிறுவக்கூடிய சிறிய மருத்துவமனை மெட்ராஸ் ஐஐடி ஆதரவுடன் மாடுலஸ் ஹவுசிங் ஸ்டார்ட்-அப் உருவாக்கியது. ‘மெடிகாப்’ என்று அழைக்கப்படும் இந்த மருத்துவமனை, கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மெட்ராஸ் ஐஐடியின் மின் பொறியியல் துறை மருத்துவர் மோகனசங்கர் சிவபிரகாசம் தலைமையிலான குழு, கோவிட்-19க்கான தொலைநிலை நோயாளிகளை கண்டறிய ஐஐடி நிறுவனத்தின் ஆராய்ச்சி பூங்காவில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வெப்பநிலை, ஆக்ஸிஜன் செறிவு, சுவாச விகிதம், இதய துடிப்பு ஆகியவை மருத்துவ ரீதியில் துல்லியமாக கண்காணிக்கிறது.
இது குறித்து பேசிய மெட்ராஸ் ஐஐடியின் மெக்கானிக்ஸ் துறையின் பேராசிரியர் வி.வி.ராகவேந்திர சாய், "அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட விரைவான நோயறிதல் இயங்குதள நிறுவனமான ரீகவர் (RICOVR) ஹெல்த்கேர் உடன் இணைந்து கோவிட்-19 ஆன்டிஜென் பரிசோதனையை உருவாக்க முடியும். இந்த திட்டம் யு.எஸ். இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப எண்டோவ்மென்ட் ஃபண்டின் விருதை வென்றது" என்றார்.
மெட்ராஸ் ஐஐடி மாணவர்களுக்கு 2020-21ஆம் கல்வியாண்டில் 186 ப்ரீ-பிளேஸ்மென்ட் சலுகைகள் (பிபிஓக்கள்) வழங்கப்பட்டன. இது 2019-20ஆம் கல்வி ஆண்டில் 170 சலுகைகளுக்கு எதிராக இருந்தது. இந்த ஆண்டு இன்டர்ன்ஷிப் டிரைவ் முற்றிலும் ஆன்லைனில் நடத்தப்பட்டது. நிறுவனத்தின் வரலாற்றில் முதல் முறையாக, தொற்றுநோய் காரணமாக கட்டுப்பாடுகளை சமாளிக்க, இந்த இன்டர்ன்ஷிப் ஒரு நாள் மட்டும் இளங்கலை மாணவர்களுக்கு 152 சலுகைகளை வழங்கிய 20 நிறுவனங்கள் பங்கேற்றன.
மெட்ராஸ் ஐஐடியின் இரண்டு ஆசிரிய உறுப்பினர்கள் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வழங்கிய 2019-20ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க ‘ஸ்வர்ணஜயந்தி பெல்லோஷிப்’ விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மெட்ராஸ் ஐஐடியின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் பிரபு ராஜகோபால் மற்றும் வேதியியல் துறையின் இணை பேராசிரியர் அன்பரசன் ஆகியோர் இந்த அங்கீகாரத்துக்காக இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.