ETV Bharat / city

மூன்றரை லட்சம் சிலைகள் பாதுகாப்பில் கேள்விக்குறி? - எச்சரிக்கும் பொன் மாணிக்கவேல் - சென்னை செய்திகள்

தமிழ்நாடு கோயில்களில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் சிலைகள் பாதுகாப்பாக இல்லை எனவும், அவை வெளிநாட்டிற்குக் கடத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் பொன் மாணிக்கவேல் எச்சரித்துள்ளார்.

ஐஜி பொன் மாணிக்கவேல் பேட்டி
ஐஜி பொன் மாணிக்கவேல் பேட்டி
author img

By

Published : Jan 6, 2022, 10:40 PM IST

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தனிப்பட்ட முறையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 290 திருக்கோயில்களுக்குச் சென்று நான் ஆய்வுமேற்கொண்டேன்.

அதில் தொன்மையான மூன்று லட்சத்து 50 ஆயிரம் சிலைகள் பாதுகாப்பாக இல்லை என்பதைக் கண்டறிந்தேன். இந்தத் தொன்மையான சிலைகள் சட்டரீதியாக ஆவணப்படுத்தப்படாமலும், பதிவுசெய்யப்படாமலும் இருக்கின்றன.

75 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் தொன்மையான சிலைகளைப் பதிவுசெய்யாததால்தான், பல சிலைகள் திருடப்பட்டு வெளிநாட்டிற்குக் கொண்டுசெல்லப்பட்டன.

உலோக சிலைகள் வெறும் காட்சிப் பொருளா?

குறிப்பாக, உற்சவ திருவிழாக்களுக்காக முன்னோர்களால் உருவாக்கப்பட்ட உலோக திருமேனி சிலைகள் வெளிநாட்டில் காட்சிப்பொருளாகவும், அதேபோல 2500 திருமேனி சிலைகள் சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருளாகவும் வைத்து பணம் சம்பாதிப்பது வேதனையளிக்கிறது.

2017ஆம் ஆண்டு சிலைகளுக்குப் பாதுகாப்பு அறை கட்ட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்பு, ஒரே ஒரு பாதுகாப்பு அறை மட்டுமே கட்டியிருப்பது வேதனை அளிக்கிறது. இந்தியத் தொல்லியல் துறை ஐந்தாயிரத்து 90 சிலைகளின் தொன்மைத் தன்மை அறிய ஆறு மாதங்கள் எடுத்துக்கொண்டது.

வருங்காலத் தமிழ்ச் சந்ததியினருக்குச் சிலைகளைப் பாதுகாத்து வைப்பது அனைவரது கடமை. மூன்று லட்சத்து 50 ஆயிரம் சிலைகளுக்குத் தொன்மையான சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஆடியோ, வீடியோ ஆதாரங்களுடன் மனு அளித்துள்ளேன்.

மீட்கப்பட்ட சிலையை விற்ற செயல்

2020ஆம் ஆண்டுமுதல் இதுவரை அமெரிக்காவிலிருந்து 516 சிலைகள் வந்துள்ளன. அடுத்ததாக வரவுள்ள 10 சிலைகளில் முக்கியச் சிலை ஒன்று வரவுள்ளது. அதாவது, 1972ஆம் ஆண்டு புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் கைலாச நாதர் நடராஜர் சிலை கொள்ளை அடிக்கப்பட்டது.

காவல் துறையினர் அந்தச் சிலைகளை மீட்டு இந்து சமய அறநிலைத் துறையிடம் ஒப்படைத்தனர். இந்து சமய அறநிலையத் துறையினர் சிலையைப் பாதுகாக்கத் தவறியதால் அது அரசுக்குத் தெரிந்தே 21 கோடி ரூபாய்க்கு அமெரிக்காவிற்கு விற்கப்பட்டது.

இது தொடர்பாக நான் வழக்குத் தொடர்ந்து விசாரணை நடத்தி, தற்போது இந்தச் சிலை இந்தியா கொண்டுவரவிருக்கிறது" எனத் தெரிவித்தார்.

பொன் மாணிக்கவேல் பேட்டி

இதையும் படிங்க: திட்டமிட்டப்படி டிஎன்பிஎஸ்சி தேர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.