ETV Bharat / city

திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, கரோனா நிவாரண உதவித்தொகை - Transgender

250 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, கரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது.

திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, கரோனா நிவாரண உதவித்தொகை

author img

By

Published : Jun 24, 2021, 11:12 PM IST

சென்னை: தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராய கலையரங்கத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், 250 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை மற்றும் 2000 ரூபாய் கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த நான்கு ஆண்டுகளில் திருநங்கைகளுக்காக நடத்தப்படும் முதல் நிகழ்ச்சி இதுதான். திருநங்கைகள் எந்த முக்கிய பிரச்னை என்றாலும் எந்த நேரத்திலும் உங்கள் அடையாள அட்டையை எடுத்துகொண்டு என்னை அணுகலாம் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், அதற்கு முன்பாக பேசிய வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, திருநங்கைகளுக்கு என்று அவசர கால பயன்பாட்டிற்கு help line எண்ணை அறிவித்து உதவி மையம் ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும் சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் நியமன உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இறுதியாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசியதாவது, சென்னையில் உள்ள 1,180 திருநங்கைகளுக்கு தற்போது முதல்கட்டமாக 250 நபர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நிவாரண உதவி தொகை 4000 ரூபாயில் முதல் தவணை 2000 ரூபாய் இன்று வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள திருநங்கைகளுக்கு இத்திட்டம் செயல்படுத்த தொடங்கியுள்ளோம் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கினர். அதோடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.