ETV Bharat / city

தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஏதாவது ஒரு அடையாள அட்டை போதும் - உயர் நீதிமன்றம் - கொரோனா தடுப்பூசி

குறிப்பிட்ட அடையாள அட்டை இல்லை என்பதற்காக கரோனா தடுப்பூசி செலுத்தாமல் எவரும் விடுபடக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ID proof is not mandatory for get vaccination MHC order

author img

By

Published : Sep 10, 2021, 11:01 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மறுவாழ்வு முகாம்களில் வசிக்காத இலங்கை தமிழர்களுக்கு ரேசன் பொருட்களை வழங்குமாறும், ஏதாவது ஒரு அடையாள அட்டையை காட்டினாலே தடுப்பூசி பேடவும் உத்தரவிடக்கோரி சென்னை பல்கலைகழக பேராசிரியரான ராமு மணிவண்ணன் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

அந்த உத்தரவில், "கரோனா ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், சம்பந்தபட்டவர்களே நேரடியாக பொருட்களை பெற முடியும். இதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டிய அவசியமில்லை" என தெரிவித்துள்ளனர்.

மேலும், ஏதாவது ஒரு அடையாள அட்டையை காட்டினாலே, அதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கும்படியும், தடுப்பூசி செலுத்தாமல் யாரும் விடுபடக்கூடாது என்றும் தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.