இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டின் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இன்றும்(நவ.24) நாளையும்(நவ.25) பட்டய கணக்காளர்கள் சி.ஏ. தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், நிவர் புயல் அச்சுறுத்தல் காரணமாக இந்தத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. அதன்படி நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வுகள் டிசம்பர் 9, 11ஆம் தேதிகளில் நடைபெறும். கூடுதல் விவரங்களுக்கு https://www.icai.org/ என்ற இணையதளத்தை அணுகவும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிஏ தேர்வு: நவம்பர் 1ஆம் தேதி அட்மிட் கார்டு வெளியீடு