ETV Bharat / city

‘இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதில் தமிழ்நாடு முதலிடம்’ - இயற்கைப் பேரிடர்

சென்னை: இந்தியாவில் இயற்கை பேரிடர்களை திறம்பட எதிர்கொள்வதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக நதிகள் சீரமைப்பு மற்றும் நீர்வள ஆதார மையத் தலைவர் சத்தியகோபால் ஐஏஎஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ias
ias
author img

By

Published : Feb 10, 2020, 8:17 PM IST

பேரிடர் மேலாண்மை கல்வி பயிலும் மாணவர்களுக்கான கருத்தரங்கம் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசிய நதிகள் சீரமைப்பு மற்றும் நீர்வள ஆதார மையத் தலைவர் சத்தியகோபால் ஐஏஎஸ், “இயற்கை சீற்றங்களில் நாம் பல்வேறு படிப்பினைகளை பெற்றுள்ளோம். அதனால் அந்தப்பேரிடர்களை நாம் மிகச் சிறப்பாக எதிர்கொள்ள முடிந்தது. நாம் எதிர்கொண்ட சீற்றங்களில் என்ன நடக்கும் எனத் தெளிவான விபரங்களை நாம் முன்கூட்டியே அறிந்திருந்தோம். ஆபத்தான இடங்களை நான்காகப் பிரித்து, அதனடிப்படையில் மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால் ஆபத்துகளில் இருந்து மக்களைக் காக்க முடிந்தது.

எங்கே, என்ன நடக்கிறது. நீங்கள் வசிக்கும் பகுதியில் என்ன நிலை என அனைத்தையும் அறிந்துகொள்ள டி.என். ஸ்மார்ட் (tnsmart) செயலியை பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ள முடியும். இந்தியாவில் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

’இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதில் தமிழ்நாடு முதலிடம்’

மழைநீர் எங்கு போக நினைக்கிறதோ அங்கே அதனைப் போக விட வேண்டும். ஆனால், தண்ணீரின் பாதைகளில் நாம் வீடுகளை கட்டிவிட்டதால் அதற்கு வழி தெரியாமல் வெள்ளமாக வீடுகளை முற்றுகையிடுகிறது. அவை தன் பாதைகளைத் தேடுகிறது என்பதே உண்மை” என்றார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், கடந்த வடகிழக்கு பருவமழையில் இயல்பை விட அதிகமான மழை நமக்கு கிடைத்துள்ளது என்றார். அரப்பிக்கடலில் ஏற்பட்ட புயல்களால் தமிழகத்திற்கு பாதிப்புகள் குறைவாக இருந்தது என்ற பாலச்சந்திரன், கோடைக்காலம் குறித்த தகவல்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க: ஆசிரியர்கள் நியமனத்திலும் மத்திய அரசிற்கு தவறான தகவல்: பள்ளிக்கல்வித்துறை மீது குற்றச்சாட்டு!

Intro:Body:
ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 10.02.20

இந்தியாவில் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வதில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் இப்போது திகழ்கிறது; சத்தியகோபால் ஐ.ஏ.எஸ் பேச்சு...

சென்னை வானிலை ஆய்வு மையத்தால் நடத்தப்பட்ட பேரிடர் மேலாண்மைகள் குறித்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசிய நதிகள் சீரமைப்பு மற்றும் நீர்வள ஆதார சேர்மன் சத்தியகோபால் ஐ.ஏ.எஸ்,

ஏற்கனவே நடந்து முடிந்த இயற்கை சீற்றங்களில் நாம் பல்வேறு படிப்பினைகளை பெற்றுள்ளோம். ஆனால், அந்தப்பேரிடர்களை நாம் மிகச் சிறப்பாக எதிர்கொள்ள முடிந்தது. காரணம் என்ன நடக்கும் என தெளிவான விபரங்களை நாம் முன்கூட்டியே அறிந்திருந்தோம். 4399 இடங்களை நாம் ஆபத்தான இடங்களாக அறிவித்தோம். பின்னர் அவற்றை நான்காக பிரித்து மிகவும் ஆபத்தான பகுதி, ஆபத்தான பகுதிகள் என பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மீட்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதால் ஆபத்துக்களில் இருந்து மக்களை காக்க முடிந்தது. நடந்த முடிந்த பேரிடர்களில் மக்கள் தங்களின் அடையாளங்களுக்கான ஆவணங்களை கூட இழந்திருந்தனர். இருப்பினும் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து முன் கூட்டியே என்ன நடக்கிறது என தெரியப்படுத்தி அவர்களை ஆபத்திலிருந்து முகாம்களுக்கு அழைத்துச் செல்ல முடிந்தது. எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பர்ஸ்ட் ரெஸ்பாண்டர்களை நாம் அடையாளம் கண்டு அவர்களை தயார் நிலையில் வைத்தோம். விழும் நிலையில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது, பாம்பு உள்ளிட்ட ஜந்துக்களை பிடிக்க நிபுணர்கள் தயார் செய்தோம். தமிழக அரசு மிச்சிறப்பாக செயல்பட்டு பேரிடர்களிலிருந்து மக்களை மீட்டது. பள்ளிகள் மண்டபங்கள் உள்ளிட்ட பொது இடங்களை மக்கள் தங்கும் மீட்பு மையங்களாக மாற்றம் செய்யப்பட்டது. காவல்துறையினர், விவசாயத்துறையினர், மீட்புப் படையினர், வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் மின்சாரத்துறை என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் மக்கள் காப்பாற்றப்பட்டார்கள்.. கஜா புயலின் போது மாலை தமிழகத்தை தாக்கும் என அறிவுறுத்தியும் மக்கள் முகாம்களுக்கு வந்து சேரவில்லை, கடைசியாக காவல்துறையினர் உதவியுடன் மக்களை கொண்டு வந்து முகாம்களில் சேர்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த சூழலில் வனிலை ஆய்வு மையமும் தமிழக அரசும் கொடுத்த எச்சரிக்கைகள் மிக முக்கியமானதாக இருந்தது..

2015 ம் ஆண்டின் புயலால் நான் மற்றும் பாலசந்திரன் ஆகியோரும் கூட பாதிக்கப்பட்டோம் எனதே உண்மை.. ஆனால் அதன் பிந்தைய பேரிடரில் என்ன செய்தால் அவ்வாறு நடக்காமல் இருக்கும் என மிகச்சரியாக திட்டமிட்டோம் என்பதே முக்கியமானது. நாங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் தேவையான அனைத்து செலவு தொகைகளும் அரசால் உடனடியாக வழங்க உத்தரவிட்டது.
எங்கே என்ன நடக்கிறது, நீங்கள் வசிக்கும் பகுதியில் என்ன நிலை என அனைத்தையும் அறிந்துகொள்ள டி.என். ஸ்மார்ட் செயலியை பதிவிரக்கம் செய்துகொண்டால் தெரிந்துகொள்ள முடியும்..
இந்தியாவில் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வதில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் இப்போது திகழ்கிறது..
ஒக்கி புயலின் போது மீனவர்கள் அரசு எச்சரிக்கை மற்றும் வானிலை எச்சரிக்கையை நிராகரித்ததால் மட்டுமே பலர் உயிர் இழந்த சோகம் ஏற்பட்டது. இவை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்..
மழைநீர் எங்கு போக வேண்டும் என நினைக்கிறதோ அங்கே அதனை போக விட வேண்டும், ஆனால், தண்ணீரின் பாதைகளில் நாம் வீடுகளை கட்டிவிட்டதால் அதற்கு வழி தெரியாமல் தேங்கி வெள்ளாமாக மாறி மனிதர்களின் வீடுகளை முற்றுகையிடுகிறது, அவை தன் பாதைகளை தேடுகிறது என்பதே உண்மை என்றார்.

பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன்..,
இயல்பை விட அதிகமான மழை கடந்துவிட்ட வடகிழக்கு பருவமழையில் நமக்கு கிடைத்துள்ளது. அரப்பிக்கடலில் ஏற்பட்ட புயல்களால் தமிழகத்திற்கு பாதிப்புகள் குறைவாக இருந்தது, கோடைகாலம் குறித்த தகவல்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படும் என்றார்..

tn_che_02_sathyagopal_ias_speech_in_metrology_conference_script_7204894

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.