ETV Bharat / city

நல்லகண்ணு, பரூக் அப்துல்லா நலம் பெற விரும்பி அரசியல் தலைவர்கள் ட்வீட் - Stalin tweets that Farooq Abdullah wants to be healed

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் விரைவில் நலம் பெற விரும்புவதாக திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நல்லகண்ணு நலம் பெற விரும்புவதாக ஸ்டாலின் ட்வீட்

author img

By

Published : Mar 31, 2021, 3:32 AM IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான நல்லகண்ணுவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நல்லகண்ணு நலம் பெற விரும்புவதாக ஸ்டாலின் ட்வீட்
நல்லகண்ணு நலம் பெற விரும்புவதாக ஸ்டாலின் ட்வீட்

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணுவுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து பெரிதும் கவலையுற்றேன். அவர் விரைந்து நலம்பெற்று, மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என விழைகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நல்லகண்ணு நலம் பெற விரும்புவதாக டிடிவி தினகரன் ட்வீட்

அதேபோல், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை அறிந்து வருத்தமுற்றேன். அவர் விரைவில் பூரண உடல் நலம் பெற்று வழக்கமான பொதுவாழ்வுப் பணிகளைத் தொடரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பரூக் அப்துல்லா நலம் பெற விரும்புவதாக ஸ்டாலின் ட்வீட்

மேலும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது மகன் உமர் அப்துல்லா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இச்செய்தியை அறிந்து வருத்தமுற்றதாகவும் பரூக் அப்துல்லா விரைந்து நலம்பெற விழைகிறேன் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.