ETV Bharat / city

’மறுபிறவி எடுத்துள்ளேன்’ - அமைச்சர் காமராஜ் கண்ணீர்! - அமைச்சர் காமராஜ் கண்ணீர்

சென்னை: சாவிலிருந்து மீண்டு வந்திருப்பதாக கரோனாவால் பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் அழுதுக்கொண்டே உருக்கத்துடன் பேசினார்.

kamaraj
kamaraj
author img

By

Published : Feb 27, 2021, 12:56 PM IST

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ”கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து மிக மோசமான நிலைக்கு போனேன். என் உயிர் உடலில் இருக்கிறதா? இல்லையா என்று தெரியாத நிலை ஏற்பட்டது. தற்போது மறுபிறவி எடுத்து தான் உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு உடல் நலம் பாதித்த போது முதலமைச்சர் டெல்லியில் இருந்தார். அமைச்சர்கள் அலறி துடித்தனர். உயிரற்ற சடலமாக ஆம்புலன்சில் சென்று கொண்டிருந்த போது, முதலமைச்சர் உடனடியாக டெல்லியில் இருந்து கிளம்பி நேரடியாக மருத்துவமனைக்கு வந்தார். என் உயிரை இங்கு வந்து அவையில் நிறுத்தி வைத்திருக்கும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். எனது சந்ததி முழுவதும் உங்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறது” என்று கண்ணீர் மல்க உருக்கமுடன் பேசினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய சட்டப்பேரவைத் தலைவர் தனபால், ”கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் குணமடைந்து இன்று அவையில் பதிலளித்துள்ளதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். முதலமைச்சரின் பாசமும், துணை முதலமைச்சரின் நேசம் உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்” என்று வாழ்த்தினார்.

இதையும் படிங்க: தொகுதிப் பங்கீடு: அதிமுக கூட்டணியில் பாஜக-விற்கு 22 தொகுதிகள்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.