சென்னை: நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா, அதிமுகவை ஆதரித்து பேசுவது போல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியான வீடியோ குறித்து அமைச்சர் பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளார்.
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா, அதிமுகவை ஆதரித்து பேசுவது போல் அமைச்சர் பாண்டியராஜன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக அனிதாவின் அண்ணனும் கண்டனம் தெரிவித்து பதிவு செய்தார். இதையடுத்து அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து அப்பதிவு நீக்கப்பட்டது. தற்போது இது தொடர்பாக விளக்கமளித்து அமைச்சர் பாண்டியராஜன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வேறு யாரோ பதிவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக சைபர் க்ரைமிடம் புகாரளிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- — Pandiarajan K (@mafoikprajan) April 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Pandiarajan K (@mafoikprajan) April 4, 2021
">— Pandiarajan K (@mafoikprajan) April 4, 2021
இதற்கு முன்பு பாஜக பிரமுகர் எச். ராஜாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்ட ஒரு சர்ச்சை பதிவுக்கு இதே போல் விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.