சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜராக 155 அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 24 சிறப்பு அரசு பிளீடர்களும், 36 கூடுதல் அரசு பிளீடர்களும், சிவில் வழக்குகளில் ஆஜராவதற்காக 48 அரசு வழக்கறிஞர்களும், குற்றவியல் வழக்குகளில் ஆஜராவதற்காக 15 அரசு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை
அதேபோல், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு 8 சிறப்பு அரசு பிளீடர்களும், 15 கூடுதல் அரசு பிளீடர்களும், சிவில் வழக்குகளில் ஆஜராவதற்காக 18 அரசு வழக்கறிஞர்களும், குற்றவியல் வழக்குகளில் ஆஜராவதற்காக 10 அரசு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசின் சார்பில் வரிகள் (Taxes) தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக வி.பிரசாந்த் கிரண் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: உருண்டு விழுந்த பாறைகள் - தடம் புரண்ட ரயில் பெட்டிகள்