ETV Bharat / city

ஊரடங்கை மதிக்காத மக்கள் - அடுத்தடுத்து வாகனங்கள் பறிமுதல்!

கரோனா தொற்றைத் தடுக்கும் நடவடிக்கையாக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை பின்பற்றாமல் வெளியே சுற்றியதாக நேற்று (மே 21) மட்டும் 5000க்கும் மேலான வழக்குகள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

lockdown
lockdown
author img

By

Published : May 22, 2021, 12:13 PM IST

சென்னை: கரோனா தொற்றால் அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை பின்பற்றாதவர்கள் மீது நேற்று (மே 21) மட்டும் 3,744 வழக்குகளை பதிவுசெய்துள்ள காவல்துறையினர், 4,461 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளன.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசால் மே 10ஆம் தேதி முதல் மே24 ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், மே 18ஆம் தேதி முதல் முறையான ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

lockdown
முழு ஊரடங்கு

அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கைச் சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய சரகங்களில் உரிய சாலை தடுப்புகள் அமைத்து, பகுதிகளாக வகைப்படுத்தி 153 வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து, ஒரு காவல் நிலைய சரகத்தில் இருந்து மற்றொரு காவல் நிலைய எல்லைக்கு பொதுமக்கள் செல்ல இ-பதிவு சான்று கட்டாயமாக்கப்பட்டு, இ-பதிவு வைத்திராத பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்பேரில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் குழுவினர் நேற்று (மே 20) மேற்கொண்ட சோதனையில், கரோனா ஊரடங்கு தடையை மீறி அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சென்றது தொடர்பாக 2,292 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 1,101 இருசக்கர வாகனங்கள், 61 ஆட்டோக்கள், 12 இலகுரக வாகனங்கள் மற்றும் 1 இதர வாகனம் என மொத்தம் 1,175 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர் மேற்கொண்ட வாகனத்தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், சென்னை பெருநகரில் கரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 1,452 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 3,015 இருசக்கர வாகனங்கள், 238 ஆட்டோக்கள், 32 இலகுரக வாகனங்கள் மற்றும் 1 இதர வாகனம் என மொத்தம் 3,286 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 3,592 வழக்குகளும், தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்காதது தொடர்பாக 3872 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. அரசு அறிவித்த வழிகாட்டுதலை மீறி செயல்பட்ட 85 கடைகள் மூடப்பட்டு மொத்தம் ரூ.10 லட்சத்து 12ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தமிழ்நாடு அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து கரோனா தொற்றை தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.