இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா தாக்கம் படிப்படியாகக் குறைந்துவந்த நிலையில், ஜனவரி 19ஆம் தேதிமுதல் 10, 12ஆம் மாணவர்களுக்கும், பிப்ரவரி 8ஆம் தேதிமுதல் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகள் திறக்கப்பட்டன.
ஆனால் தற்போது தமிழ்நாட்டில் கரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்துவருகிறது. மாணவர்கள், பொதுமக்கள் நலன்கருதி வரும் 22ஆம் தேதிமுதல் மறு உத்தரவு வரும்வரை அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இருப்பினும் 9, 10, 11ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.
மேலும், தமிழ்நாடு மாநில வாரியம் தவிர பிற வாரியங்களின்கீழ் இயங்கும் பள்ளிகளில், அந்தத் தேர்வு வாரியங்கள் அறிவித்ததன்படி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.
அதற்காகச் சிறப்பு வகுப்புகள் நடத்தவும், விடுதிகள் இயங்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தொடர்ந்து வகுப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கோவிட் விதிமுறைகள் அனைத்தையும் கடைப்பிடித்து வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சர் முதல் எதிர்க்கட்சி தலைவர் வரை பரப்புரை செய்ய தடை கோரி வழக்கு!