தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், திருவள்ளுர், கடலூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 53 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. அதிகப்பட்ச மழைப்பொழிவாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் 19 செ.மீ மழையும், கடலூரில் 17 செ.மீ. மழையும், நெல்லையில் 15 செ.மீ. மழையும், காஞ்சிபுரத்தில் 13 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இதுமட்டுமின்றி லட்சத்தீவில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குமரி மீனவர்கள் லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கனமழை எதிரொலி: சென்னை உள்ளிட்ட எட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!