தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று அரசு அலுவலங்களுக்கு பொது விடுமுறை அளிக்க மாநில அரசுக்கு, மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்திருந்தது. இக்கோரிக்கையை பரிசீலித்த தமிழ்நாடு அரசு முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 27, 30 ஆகிய தேதிகளில் பொது விடுமுறை அறிவித்துள்ளது.
மேலும், தேர்தல் நடக்கும் பகுதிகளிலுள்ள வணிகம், வர்த்தக மையங்களிலுள்ள ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது என்று மாவட்ட ஆட்சியருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வேளையில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு அன்று வாக்குப்பதிவு நடக்கும் இடங்களிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக நிறுவனம், தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகிய அலுவலகங்களுக்குப் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பால் விநியோகம் தடை
அவசர தேவையின் காரணமாக குறைவான ஆட்களுடன் இந்த அலுவலகங்கள் செயல்படும் என்றும் இந்த உத்தரவானது தேர்தல் நடக்காத சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய பகுதிகளுக்கு பொருந்தாது எனவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.