சென்னை: தமிழ்நாட்டில் தொடர் கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று(நவ.19) சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்த நிலையில், நாளை(நவ.20) சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிப்பு வெளியாகலாம்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!