ETV Bharat / city

'நீட், வேளாண் சட்டம் ரத்து, தமிழுக்கு முன்னுரிமை, நிதித் துறை குழு' - ஆளுநர் உரை

நீட், வேளாண் சட்டங்களை ரத்து செய்தல், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை, இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை, நிதித் துறை வல்லுநர்கள் அடங்கிய குழு அமைப்பு எனச் சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையின் சாரம்சத்தைப் பார்க்கலாம்.

ஆளுநர் உரை
ஆளுநர் உரை
author img

By

Published : Jun 21, 2021, 11:43 AM IST

சென்னை: தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர், கரோனா பரவல் காரணமாக, ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்திருக்கும் கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை:

இக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், "தமிழ் இனிமையான மொழி. தமிழை இந்திய அலுவல் மொழியாக்க வலியுறுத்துவோம். தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசுப் பள்ளியில் பயின்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்
ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்

வேளாண் சட்டங்கள் ரத்து

2020ஆம் ஆண்டு ஒன்றிய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்படும். 2021 - 22ஆம் ஆண்டில் 125 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இலக்கை அடைய காவிரி டெல்டா கடைமடைப் பகுதிவரை நீர் சென்றடைய 4,061 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள், புத்துயிர் ஊட்டப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாவட்டந்தோறும் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். மின் ஆளுகையை ஊக்குவித்து இணையவழி மூலம் அரசு சேவைகளைப் பெறுவதற்கு எங்கும் எப்போதும் பொதுமக்கள் உடனுக்குடன் இணைய வழி வாயிலாகப் பெற வழிவகைச் செய்யப்படும்.

நிதித் துறை வல்லுநர்கள் அடங்கிய குழு

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்காக தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், நிதித் துறை வல்லுநர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய வல்லுநர் குழு அமைக்கப்படும். தமிழ்நாடு நிதிநிலையின் உண்மையான நிலையை விளக்கும் வகையில் வெள்ளை அறிக்கை ஜூலை மாதம் வெளியிடப்படும்

முதலமைச்சருக்கான பொருளாதர ஆலோசனை குழு
முதலமைச்சருக்கான பொருளாதர ஆலோசனைக் குழு

நீட் தேர்வு ரத்து

நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டமுன் வடிவு கொண்டுவந்து, குடியரசுத் தலைவரை வலியுறுத்துவோம். சென்னை - கன்னியாகுமரி தொழில் பெரு வழியிலும் சென்னை - பெங்களூரு தொழில் பெருவழியிலும் அமைந்துள்ள தொழில் வளர்ச்சிக் குறைவாக உள்ள வட மாவட்டங்களில் அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கத் தேவையான சட்டங்களையும் சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வற்புறுத்தும். முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான அனுமதியை ஒன்றிய அரசும் கேரள அரசும் வழங்க வேண்டும்.

15 நாள்களுக்குள் ஸ்மார்ட் கார்டுகள்

குடும்ப அட்டை விண்ணப்பிக்க தகுதிவாய்ந்த அனைவருக்கும் 15 நாள்களுக்குள் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். கரோனா மூன்றாவது அலையைச் சமாளிக்க இந்த அரசு அனைத்துவித முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் செய்யும். திரவ மருத்துவ ஆக்ஸிஜனுக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்
ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவியாக மொத்தம் 10 ஆயிரத்து 68 கோடி ரூபாய் இந்த அரசு பதவி ஏற்றது முதல் வழங்கியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு புதிய தடுப்பூசி கிடைக்க உறுதிசெய்யுமாறு ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: LiveUpdates: 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.