ETV Bharat / city

செம்மரக்கடத்தல் - டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - செம்மரம்

சென்னை: செம்மரக்கடத்தல் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளில், காவல் துறையினர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளனவா என இரண்டு வாரங்களில் பதிலளிக்க டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt
author img

By

Published : Sep 14, 2020, 5:56 PM IST

செம்மரம் கடத்தியதாக மகபூ பாஷா என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அவரது தாயார் பாலி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு, மகபூ பாஷாவை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக கைது செய்யப்படுவதாகவும், சுட்டுக் கொல்லப்படுவதாகவும் செய்திகள் வருவதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

சரியான வேலை வாய்ப்பு இல்லாததால், இந்த தொழிலாளர்களை, அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் தங்களின் சுயலாபத்திற்காக பயன்படுத்திக்கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், அவர்களுக்கு சொந்த மாவட்டங்களிலேயே உரிய வேலை வாய்ப்பை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தெரிவித்தனர்.

தாமாக முன்வந்து வழக்கில் தமிழ்நாடு காவல் துறை இயக்குநரை எதிர் மனுதாரராக இணைத்த நீதிபதிகள், செம்மரக்கடத்தல் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? பதியப்பட்ட வழக்குகளில், காவல் துறையினர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளனவா? கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும், மாற்று வேலை வாய்ப்புக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

செம்மரக் கடத்தலை தடுக்க தமிழ்நாடு, ஆந்திர காவல்துறையினர் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனரா? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினர். இரண்டு வாரங்களில் இவற்றுக்கு பதிலளிக்க காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: ஆன்லைனில் பாலியல் லிங்க்: உ.பி.யில் 11 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.