சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக, அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தன் மீதான குற்றப்பத்திரிகைக்கு தடை விதிக்கக்கோரி ஹேம் நாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை விசாரணைக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம் காவல் துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையில் ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என சித்ராவின் தந்தை காமராஜ் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சதீஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக சித்ராவின் தந்தை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.