சென்னை: .இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(செப்.27) ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,மயிலாடுதுறை,கடலூர்,விழுப்புரம்,திருவண்ணாமலை,திருப்பத்தூர்,வேலூர்,ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,பெரம்பலூர்,அரியலூர்,திருச்சிராப்பள்ளி,புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,மயிலாடுதுறை,கடலூர்,கள்ளக்குறிச்சி,திருவண்ணாமலை,விழுப்புரம்,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப்.29ஆம் தேதி ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப்.30 மற்றும் அக்.1ஆம் தேதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘மழை காலங்களில் பள்ளிக் கட்டடங்கள் மீது கூடுதல் கவனம் இருக்க வேண்டும்’- ஸ்டாலின் உத்தரவு