வடகிழக்குப் பருவமழைத் தொடங்க உள்ள நிலையில், எதிர்வரும் 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் அதீத காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால் சென்னை, காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், எண்ணூர் ஆகிய துறைமுகங்களில் இன்று மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.