ETV Bharat / city

தமிழ்நாட்டிற்கு அலெர்ட் - 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய தேதிகளில் கனமழை

author img

By

Published : Jul 8, 2021, 2:13 PM IST

Updated : Jul 8, 2021, 2:55 PM IST

தமிழ்நாடு முதல் மன்னார் வளைகுடா வரை (1 கிலோமீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக இன்று (ஜூலை 8) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (ஜூலை 9)

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூலை 10 முதல் 12

தென் மேற்கு பருவமழை தீவிரமடைவதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மலை பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மலைப்பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடும், பொதுமக்கள் மலை ஏற்றத்தை தவிர்க்கவும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய தேதிகளில் கனமழை
தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஜூலை 9 முதல் 12 வரை

  • வங்க கடல் பகுதிகளான குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
  • தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 10 முதல் 12 வரை

  • அரபிக்கடல் பகுதிகளான கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் (ஜூலை 10) பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
  • மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகளில் 40 முதல் 50 வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

இதனால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: 'தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு!'

Last Updated : Jul 8, 2021, 2:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.