தமிழ்நாட்டில் கரோனா தொற்று கட்டுக்கடங்காமல் அதிவேகமாகப் பரவி வருகிறது. ஆரம்பத்தில் ஒன்று, இரண்டு என்றிருந்த உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளாக நாளாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இன்று வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு குறித்த தகவலில், ”தமிழ்நாட்டில் உள்ள 44 அரசு மற்றும் 33 தனியார் ஆய்வகங்களில் இதுவரை, 5 லட்சத்து 85 ஆயிரத்து 678 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 34 ஆயிரத்து 914 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 579 பேரின் மாதிரிகள் ஆய்வில் உள்ளன.
மாநிலம் முழுவதும் இன்று மட்டும் 12 ஆயிரத்து 421 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 1,685 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் 1,649 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அல்லாமல், விமானம் மூலம் டாமனிலிருந்துவந்த ஒருவர், குவைத்திலிருந்து வந்த மூவர், மாலத்தீவிலிருந்து வந்த ஒருவர், டெல்லியிலிருந்து வந்த இருவர், ஆந்திரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகம், அசாம், மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த தலா ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும், தொடர்வண்டி மூலம் டெல்லியிலிருந்து வந்த 15 பேர், மகாராஷ்டிராவிலிருந்து வந்த 5 பேர், கர்நாடகாவிலிருந்து வந்த இருவர், ஆந்திராவிலிருந்து வந்த ஒருவர் என மொத்தம் 1,685 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 16,279 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை 18 ஆயிரத்து 325 பேர் குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர். இன்று மட்டும் 798 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி இன்று 21 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 307ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு:
- சென்னை மாவட்டம் - 24,545
- செங்கல்பட்டு மாவட்டம் - 2,146
- திருவள்ளூர் மாவட்டம் - 1,476
- காஞ்சிபுரம் மாவட்டம் - 567
- திருவண்ணாமலை மாவட்டம் - 522
- கடலூர் மாவட்டம் - 491
- திருநெல்வேலி மாவட்டம் - 400
- விழுப்புரம் மாவட்டம் - 385
- அரியலூர் மாவட்டம் - 384
- தூத்துக்குடி மாவட்டம் - 365
- மதுரை மாவட்டம் - 333
- கள்ளக்குறிச்சி மாவட்டம் - 295
- சேலம் மாவட்டம் - 211
- திண்டுக்கல் மாவட்டம் - 182
- கோயம்புத்தூர் மாவட்டம் - 166
- விருதுநகர் மாவட்டம் - 154
- பெரம்பலூர் மாவட்டம் - 144
- ராணிப்பேட்டை மாவட்டம் - 139
- தேனி மாவட்டம் - 125
- தஞ்சாவூர் மாவட்டம் - 125
- திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 120
- ராமநாதபுரம் மாவட்டம் - 118
- திருப்பூர் மாவட்டம் - 114
- தென்காசி மாவட்டம் - 106
- வேலூர் மாவட்டம் - 111
- கன்னியாகுமரி மாவட்டம் - 95
- நாகப்பட்டினம் மாவட்டம் - 88
- கரூர் மாவட்டம் - 87
- நாமக்கல் மாவட்டம் - 85
- ஈரோடு மாவட்டம் - 73
- திருவாரூர் மாவட்டம் - 69
- திருப்பத்தூர் மாவட்டம் - 42
- சிவகங்கை மாவட்டம் - 42
- புதுக்கோட்டை மாவட்டம் - 40
- கிருஷ்ணகிரி மாவட்டம் - 37
- தருமபுரி மாவட்டம் - 19
- நீலகிரி மாவட்டம் - 14
கரோனா பாதிப்போடு தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள்:
- பன்னாட்டு விமானங்களில் வந்தவர்கள் - 149
- உள்நாட்டு விமானங்களில் வந்தவர்கள் - 56
- தொடர்வண்டியில் வந்தவர்கள் - 294
இதையும் படிங்க: கெஜ்ரிவாலின் கரோனா பரிசோதனை முடிவு வெளியீடு!