சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டடங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயிலையும், மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையையும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த இயற்கை மருத்துவக் கண்காட்சியை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலுள்ள மூன்று அடுக்கு மாடி கட்டடங்களில், மருத்துவமனை செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த மருத்துவமனையில் அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், நவீனக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ் - வுஹான் நகருக்கு போக்குவரத்து நிறுத்திவைப்பு
இதற்கு முன்னதாக நிபா, எபோலா வைரஸ்களை எப்படி எதிர்கொண்டோமோ, அதேபோல் இந்த கரோனா வைரஸ் தமிழ்நாட்டை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து விமான நிலையங்களில் கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.
இந்தியாவில் சீரழியும் ஜனநாயகம்... வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
மாநிலத்தில் புதிதாக ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. அவற்றில் ஆறு மருத்துவக் கல்லூரிகளின் தொடக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதலமைச்சர் விரைவில் பூமி பூஜை செய்யவுள்ளார்.
மேலும் புதிதாக கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசின் தொழில்நுட்பக் குழு அனுமதி வழங்கியுள்ளது. உயர்மட்டக் குழுவின் அனுமதி விரைவில் கிடைத்தவுடன் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் எந்த மருத்துவமனையிலும் குழந்தை கடத்தல் நடைபெறவில்லை. அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான கண்காணிப்பு படக்கருவிகள் வசதி செய்யப்பட்டு வருகின்றது” என்றார்.