ETV Bharat / city

பணி நிறைவுபெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவு ரத்து

கல்வியாண்டின் மத்தியில் பணி நிறைவுபெறும் ஆசிரியர்களுக்கு, மறு நியமனம் வழங்க வேண்டும் எனத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தனி நீதிபதியின் உத்தரவு ரத்து
தனி நீதிபதியின் உத்தரவு ரத்து
author img

By

Published : Dec 27, 2021, 1:52 PM IST

சென்னை: அரசுப் பள்ளிகளில் பணியாற்றி, கல்வியாண்டின் மத்தியில் பணி நிறைவுபெற்ற ஆசிரியர்கள், மறு நியமனம் கோரி அளித்த விண்ணப்பத்தை நிராகரித்து அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை ஏற்றுக்கொண்ட தனி நீதிபதி, கல்வியாண்டு முடியும்வரை மறு நியமனம் வழங்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி, பள்ளிக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட கல்வித் துறை அலுவலர்கள் தாக்கல்செய்த மேல்முறையீட்டு வழக்கை, நீதிபதிகள் வைத்தியநாதன், விஜயகுமார் அமர்வு விசாரித்தது.

விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் உபரி ஆசிரியர்கள் மாவட்டத்தில் இருப்பதால், பணி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் அவர்களின் சேவை தேவையில்லை என்பதால், அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும், உபரி ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக, அரசு கொள்கை முடிவெடுத்து பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்குத் தொடராத நிலையில், மறு நியமனம் மறுத்த உத்தரவை ரத்துசெய்ய முடியாது என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

அதேசமயம், கல்வியாண்டின் மத்தியில் ஆசிரியர்கள் பணி ஓய்வுபெறுவதால் மாணவர்கள் நலம் பாதிக்கப்படும் என ஆசிரியர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கல்வியாண்டு மத்தியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு, கல்வியாண்டு இறுதிவரை மறு நியமனம் வழங்குவது தொடர்பாக 2018இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையில், உபரி ஆசிரியர்கள் இருந்தால், ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளதாகக் கூறி, ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதிவரை மறு நியமனம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்துசெய்தனர்.

உபரி ஆசிரியர்கள் உள்ள நிலையில், கல்வியாண்டு மத்தியில் ஓய்வுபெறும் ஆசிரியர்கள், மறு நியமனம் கோர எந்த உரிமையும் இல்லை என உயர் நீதிமன்றம், ஏற்கனவே ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளதையும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: PROJECT TIGER: புலிகளைப் பாதுகாக்க ரூ. 2.12 கோடி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.