2018ஆம் ஆண்டு சங்ககிரி நீதிமன்றத்தில் ராஜேஷ் கண்ணா என்பவர் நீதிபதியாக பணிபுரிந்துள்ளார். அப்போது, பணியை முடித்துவிட்டு நாமக்கல்லில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதன்பின் அந்த இளைஞரின் குடும்பத்தினர், ராஜேஷ் கண்ணா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், வழக்கை திசை திருப்பும் வகையில் நீதிபதி ராஜேஷ் கண்ணா ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இதையடுத்து, அரூர் சார்பு நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்து வரும் ராஜேஷ் கண்ணாவை, தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.