ETV Bharat / city

ரூ.5.61 கோடி செலவில் மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் - கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழகம்

ரூ.5.61 கோடி செலவில் மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் அமைக்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

handcraft tourism village, Mamallapuram, கைவினை சுற்றுலா கிராமம், மாமல்லபுரம், மகாபலிபுரம், சட்டப்பேரவை செய்திகள், சட்டசபை செய்திகள், கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழகம்
கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழகம்
author img

By

Published : Sep 6, 2021, 4:04 PM IST

Updated : Sep 6, 2021, 9:04 PM IST

சென்னை: கைத்தறி, கைத்திறன், துணிநூல், கதர்துறை ஆகியவற்றின் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடந்தது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், "தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழகம் மூலம் அப்பகுதியில் உள்ள கைவினைஞர்கள் நலனுக்காகவும், சுற்றுலா மேம்பாட்டிற்காகவும் 5.61 கோடி செலவில் மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் அமைக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மாமல்லபுரம், அதனைச் சுற்றியுள்ள தொன்மையான, நலிந்த கைவினை கலைஞர்களைக் கொண்டு குடியிருப்புகளைச் சீர்செய்து, மேம்படுத்தி, தேவைக்கேற்ப அழகுபடுத்தி, அவர்கள் வசிக்கும் இடங்களை, சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையிலும் மாற்றிட இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கற்சிற்ப உற்பத்தி நிலைய உற்பத்தியாளர்கள் வணிகம் செய்திட இத்திட்டம் வழிவகை செய்யும். மாமல்லபுரம் நுழைவு வாயிலில் ரூபாய் 1.80 கோடி மதிப்பில் 40 அடி உயரத்தில் கைவினை சுற்றுலா கிராமத்திற்கான பிரமாண்ட ஸ்தூபி அமைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Sep 6, 2021, 9:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.