ETV Bharat / city

பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றமா?

சென்னை: அரையாண்டு விடுமுறைக்குப் பின்னர் பள்ளி திறக்கும் தேதியில் மாற்றம் வருவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

author img

By

Published : Dec 30, 2019, 2:14 PM IST

Breaking News

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை டிசம்பர் 23 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டு பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இந்தத் தேர்தலின் வாக்குப்பெட்டிகள் பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒரு சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரையிலும் நடைபெறும் என்பதால் மறுநாள் பள்ளிகளை திறப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பள்ளி திறக்கும் தேதியை ஒரு நாள் தள்ளி வைக்க ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு மாநில தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் அளித்துள்ளனர். ஆனால், விடுமுறை அளிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விடுபட்ட பகுதிகளுக்கு 31ஆம் தேதி மறு வாக்குப்பதிவு!

Intro:
பள்ளித் திறக்கும் தேதியில் மாற்றமா?Body:
பள்ளித் திறக்கும் தேதியில் மாற்றமா?

சென்னை,

அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் பள்ளித் திறக்கும் தேதியில் மாற்றம் வருவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு விடுமுறை 23 ந் தேதி முதல் 2 ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் 3 ந் தேதி திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27 மாவட்டங்களில் 2 கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பெட்டிகள் பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. 2 ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
வாக்கு எண்ணிக்கை 3ம் தேதி வரை நீடிப்பதற்கான  வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரையிலும் ஒரு சில இடங்களில் நடைபெறும். இதனால் மறுநாள் பள்ளிகளை திறப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பள்ளி திறக்கும் தேதியை 3 ந் தேதிக்கு பதில் ஒரு நாள் தள்ளி வைக்க வேண்டும் என ஆசிரியர் சங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் அளித்துள்ளனர்.

இது குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறும்போது, வாக்கு எண்ணிக்கை 2 ம் தேதி நடைபெறுகிறது. ஆசிரியர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு மறுநாள் 3 ந் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் விடுமுறை அளிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.