தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக, நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கும், அவர்களின் தங்கும் நாள்களை நீட்டிப்பதற்கும் விழாக்கள் உறுதுணையாக உள்ளன. நமது கலை, பண்பாட்டை காணவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
மேலும், சாதனை முயற்சிகளை அங்கீகரிக்கும் ’கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ 2000ஆம் ஆண்டுவரை இவ்வாறே அழைக்கப்பட்ட போதிலும், ’கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்டு’ என்ற புத்தகத்தை, ஒவ்வொரு ஆண்டும் சாதனைகளை வரிசைப்படுத்தி வெளியிட்டுவருகிறது.
இதனைக் கருத்தில்கொண்டு, 10,000 பரதநாட்டிய கலைஞர்களை வைத்து பிப்ரவரி 8ஆம் தேதி மாலை 4.30 மணியளவில், சென்னை கவுரிவாக்கத்தில் உள்ள எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியில், கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சியாக, ’சதிர் 10,000’ என்ற நிகழ்ச்சியை நடத்த சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.
கல்லூரிகள், பள்ளிகள், நடனப் பள்ளிகளில் உள்ள பரத நாட்டிய மாணவர்கள், இந்தப் புகழ்வாய்ந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வெற்றியடைய சுற்றுலாத் துறை அன்புடன் அழைக்கிறது.
இதில் இலவசமாக, http://sadhanaisigram.com/ibd/register/ என்ற இணையதளத்திலும், 99947 97110 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெரிய கோயில் குடமுழுக்கு விழா: இசை, நாட்டிய நிகழ்ச்சிகளை கண்டுகளித்த மக்கள்