சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில், அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
“ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேமநல நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், ஓய்வூதிய ஒப்பளிப்பு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் ஆகிய சட்ட ரீதியான ஓய்வூதியப் பலன்களை வழங்கும்பொருட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குப் பங்கு மூலதன உதவி, குறுகிய கால கடன்கள், முன்பணம் ஆகியவற்றின் மூலமாக அரசு தொடர்ந்து நிதியுதவி வழங்கிவருகின்றது.
அதன்படி 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்குச் சட்டரீதியான ஓய்வூதிய பணப்பலன்களை வழங்கிட அரசு 497.32 கோடி ரூபாய் அனுமதி அளித்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தகுதி இருந்தும் பதவி உயர்வு இல்லை - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்