அரசுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கும் மற்றும் திருப்பதி, காளஹஸ்தி, புதுச்சேரி, பெங்களூரு மற்றும் நெல்லூர் ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் மூவாயிரத்து 166 பேருந்துகள், சுமார் 16 லட்சம் கி.மீ. இயக்கப்பட்டு, 16 லட்சத்து 50 பயணிகளின் போக்குவரத்து தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றது.
குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் விழுப்புரம் கோட்டப் போக்குவரத்துக் கழக வரலாற்றில் குறைந்தக் கட்டணத்தில் 52 குளிர்சாதன பேருந்துகள் அரசால் அண்மையில் தொடங்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பயணிகள் எளிதாக பேருந்துகளை முன் பதிவு செய்துகொள்ள 73 வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான முன்பதிவுகள் இணையத்தில் பதிவு செய்யும் வசதிகள் செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளன.
இந்த வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கூடுதலாக 193 வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் உள்பட மொத்தம் 266 வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளையும் இணையம் மூலம் முன் பதிவு செய்துகொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதிகள் tnstc.in, busindia, paytm, makemytrip, goibibo மற்றும் redbus ஆகிய செயலிகள் மூலம் வழங்கப்படுவதால், பயணிகள் இதனை பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க ஹிந்துஜா குழுமம் தயார்?