ETV Bharat / city

'தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி கூடாது' - தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி கூடாது

சென்னை: திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதியை திரும்பப் பெறவேண்டும் என பொது சுகாதார வல்லுநர் குழுவின் மருத்துவர் குகானந்தம் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

gukanantham
gukanantham
author img

By

Published : Jan 7, 2021, 4:13 PM IST

கரோனா தொற்றை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்குவதற்காக, தமிழக அரசு மருத்துவ வல்லுநர் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு வைரஸ் தொற்றின் பரவலைக் கண்டறிந்து அரசுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது. அதனடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வு உள்ளிட்ட முடிவுகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அரசு அனுமதித்துள்ளது. மேலும், பொங்கலுக்குப் பிறகு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்கும் பணிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சியின் முன்னாள் சுகாதார அலுவலரும், பொது சுகாதார வல்லுநர் குழுவின் உறுப்பினருமான மருத்துவர் குகானந்தம் கூறுகையில், “அரசின் நடவடிக்கையால் கரோனா வைரஸ் தொற்று மிகவும் குறைந்து இருக்கிறது. மருத்துவர்கள் செவிலியர்கள் களப்பணியாளர்கள் இரவு பகல் பாராமல் தீவிரமாக பணிபுரிந்ததால் இது சாத்தியமானது. இறப்பு விகிதமும் ஒற்றை இலக்கத்தில் வந்துள்ளது.

’தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி கூடாது’

வல்லுநர் குழு தரப்பில் திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டும் அனுமதி அளிக்கவும், தனிமனித இடைவெளியை பின்பற்றவும் தெரிவித்தோம். ஆனால், நிர்பந்தம் காரணமாக அரசு அனுமதியளித்துள்ளது. திரையரங்குகள் பொதுவாகவே மூடப்பட்டு, குளிர்சாதன வசதியுடன் இருக்கும் என்பதால், மக்கள் பேசும்போதும், இருமும்போதும் கரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே தொற்றின் தீவிரம் குறையும் வரை காத்திருக்கும்படி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அரசு அனுமதித்ததை திரும்பப்பெற வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால், 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை தனிமனித இடைவெளியுடன், முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்றவற்றை கடைபிடிக்க அறிவுறுத்தி பள்ளிகளை திறக்க அறிவுறுத்தியுள்ளோம். இருப்பினும், மாணவர்களுக்கு வைரஸ் தொற்று வந்தால் அவர்கள் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படலாம். எனவே பள்ளிகள் திறப்பிலும் அவசரம் காட்டாமல் அரசு சிந்தித்து செயல்படலாம்.

கரோனா தடுப்பூசிகள் குறித்து முரண்பாடான கருத்துகள் நிறைய வெளிவருகின்றன. தேசிய அளவிலும் தமிழகத்திலும் நன்றாக திட்டமிடப்பட்டுள்ளதால், தடுப்பூசியால் பாதிப்புகள் வரும் என யாரும் பயப்படத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திரையரங்குகளில் 100% இருக்கை? - நாளை விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.