தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் வசதிக்கேற்ப, தாழ்வழுத்த மின் நுகர்வோரின் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்ப்டடுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " சிறுகுறு தொழில்கள், தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த மே 31 வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத மின் கட்டணம் செலுத்தாத உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு தாமத கட்டணத்துடன் ஜூன் 15ஆம் தேதி வரை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறு குறு தொழிற்சாலைகள் கூடுதல் வைப்புத்தொகை கேட்பு செலுத்தவும், தாழ்வழுத்த மின் நுகர்வோர் கூடுதல் வைப்புத்தொகை செலுத்தவும் ஜூன் 15வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் வகுப்புகளை பதிவு செய்ய பள்ளிகளுக்கு உத்தரவு