சென்னை: இலங்கைத் தமிழர் முகாம்களில் வாழும் தமிழர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் எனச் சட்டப்பேரவையில் கடந்த 27ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனையடுத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், கல்வி வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்தக் குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கை தமிழர் முகாம்களில் வாழும் தமிழர்களின் வாழ்வாதாரம் மேம்பட சிறுபான்மையினர், வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராச்சாமி துணைத் தலைவராகவும், வழக்கறிஞர் மனு தங்கராஜ், பத்திரிகையாளர் கோவி லெனின்,புகழ்பெற்ற மும்பை, டாட்டா சமூக அறிவியல் நிறுவன (TISS) இணை பேராசிரியர் பாரி வேலன் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழு அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள், கல்வி மேம்பாட்டிற்காகவும், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைச் சீர்படுத்தும் பணிகளில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் மேம்பட்ட உரிமைகள் ,உதவிகள் பெறும் நோக்கில் அமைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2025வரை குறைவாக சாப்பிடுங்க.. கொழுகொழு அதிபர் உத்தரவு!