சென்னை: ஆதி திராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும், 98 மேல்நிலைப் பள்ளிகளில், இன்வெர்ட்டர் வசதி இல்லாத 51 மேல்நிலைப் பள்ளி கணினி ஆய்வகங்களுக்கு, 6 மின்கலன்களுடன் கூடிய 5 கிலோ வாட் திறன் கொண்ட இன்வெர்ட்டர் வாங்கி வழங்கிட ரூ.86 லட்சத்து 70 ஆயிரம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர், 2021-2022ஆம் ஆண்டுக்கான திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டின்போது, ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 98 மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப் பிரிவு பயிலும் மாணாக்கருக்காக, 51 கணினி ஆய்வகங்களுக்கு 6 மின்கலன்களுடன் கூடிய இன்வெர்ட்டர்கள் (Inverters) ரூ.87.00 லட்சம் செலவில் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
இதனை செயல்படுத்தும் பொருட்டு, ஆதி திராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும், 98 மேல்நிலைப் பள்ளிகளில் இன்வெர்ட்டர் வசதி இல்லாத 51 மேல்நிலைப் பள்ளி கணினி ஆய்வகங்களுக்கு, 6 மின்கலன்களுடன் கூடிய 5 கிலோ வாட் திறன் கொண்ட இன்வெர்ட்டர் வாங்கி வழங்கிட ரூ.86 லட்சத்து 70ஆயிரம் நிதி ஒப்பளிப்பு செய்து இன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் இரு மேம்பாலங்களை திறந்துவைக்கும் முதலமைச்சர்